மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஈரான் போர்: கோவை - அபுதாபி விமான சேவை ரத்து

ஈரான் போர் காரணமாக கோவை - அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

News image

கோவை விமான நிலையம்.

Updated On :1 மார்ச் 2026, 6:38 am

ஈரான் போர் காரணமாக கோவை - அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் நான்கு நாள்கள் இண்டிகோ நிறுவனம் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை வழங்கப்படுகிறது. இரவு 8.40 மணிக்கு புறப்படும் விமானம் அபுதாபிக்கு 11.15 மணிக்கு சென்றடையும், அதேபோல் அபுதாபியில் இருந்து திங்கள், புதன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் விமானம் அதிகாலை 5:45 மணிக்கு கோவை வந்தடையும், இந்த விமான சேவையானது ஈரான் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இதுதொடர்பாக இண்டிகோ நிறுவனத்தினர் கூறுகையில், அபுதாபியில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று 160 க்கும் மேற்பட்ட பயணிகள் அபுதாபி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தனர். ஈரான் போர் காரணமாக வான்வெளி மூடப்பட்டதால் கோவை, அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் அந்த விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. விமான ரத்து செய்யப்பட்டதால் அதற்கான விமான டிக்கெட் கட்டணங்களை அனைத்தும் பயணிகளுக்கு திரும்பி வழங்கப்படும் என்றனர்.

Summary

Flight service between Coimbatore and Abu Dhabi was canceled due to the Iran war.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.