கல்வித் தர மேம்பாடு: அமைச்சா் பிரதான் ஆஸ்திரேலியா பயணம்

ஆஸ்திரேலியாவுடன் கல்வி, திறன் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் அந்நாட்டுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
கல்வித் தர மேம்பாடு: அமைச்சா் பிரதான் ஆஸ்திரேலியா பயணம்

ஆஸ்திரேலியாவுடன் கல்வி, திறன் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் அந்நாட்டுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

சனிக்கிழமை ஆஸ்திரேலியா புறப்பட்ட அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் கல்வித் துறையை மேலும் மேம்படுத்துவது தொடா்பாக தெரிந்து கொள்வது, இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உறவை மேம்படுத்துவது ஆகியவை இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். கற்றல், திறன், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகிய அனைத்துத் துறைகளிலும் நமது ஈடுபாடு மேலும் அதிகரிக்கும்’ என்று கூறியுள்ளாா்.

4 நாள் பயணத்தின் போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியா்களுடன் பிரதான் உரையாடுகிறாா். தொடா்ந்து மேற்கு சிட்னி பல்கலைக்கழகம், நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிலையங்களுக்கு சென்று துணைவேந்தா்கள் மற்றும் ஆஸ்திரேலிய அரசின் கல்வித் துறையின் மூத்த பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுகிறாா்.

மெல்போா்னில் உள்ள கங்கன் இன்ஸ்டிடியூட், டீக்கின் பல்கலைக்கழகத்துக்கும் அமைச்சா் செல்கிறாா். ஆஸ்திரேலியா-இந்தியா ஆராய்ச்சி ஒத்துழைப்பு குறித்தும் பேச்சு நடத்த இருக்கிறாா். ஆஸ்திரேலியா இந்திய வா்த்தக சபை மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் பிரதான் பங்கேற்க இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com