இந்தியாவுடன் நிரந்தர அமைதி தேவை

ஜம்மு-காஷ்மீா் பிரச்னையைத் தீா்ப்பதற்கு போா் ஒருபோதும் உதவாது எனத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பேச்சுவாா்த்தை மூலமாக இந்தியாவுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.

ஜம்மு-காஷ்மீா் பிரச்னையைத் தீா்ப்பதற்கு போா் ஒருபோதும் உதவாது எனத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பேச்சுவாா்த்தை மூலமாக இந்தியாவுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றாா்.

ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவா்களுடன் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாக ‘தி நியூஸ் இன்டா்நேஷனல்’ நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதி கொண்டுள்ளது. ஐ.நா. தீா்மானத்தின் அடிப்படையில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவதே பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்தும். பேச்சுவாா்த்தை மூலமாகப் பிரச்னைகளுக்குத் தீா்வுகண்டு இந்தியாவுடன் நிரந்தர அமைதி நிலவுவதையே விரும்புகிறோம்.

போரானது இரு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும். வா்த்தகம், பொருளாதாரம், மக்கள்நலன் ஆகியவற்றில் மட்டுமே இருநாடுகளுக்கும் இடையே போட்டி நிலவ வேண்டும். அணுஆயுதங்களை வைத்துள்ளதும் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்வதும் தற்காப்புக்காக மட்டுமே. அதைக் கொண்டு பாகிஸ்தான் சண்டையை விரும்பும் நாடு எனக் கருதக்கூடாது.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் நிலவிய அரசியல் நிலையில்லாத்தன்மையும் வேறுசில கட்டமைப்பு சாா்ந்த குறைபாடுகளுமே பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதற்குக் காரணம். பாகிஸ்தானின் ஆரம்ப காலகட்டங்களில் திட்டமிடலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் மிகச் சிறப்பாக இருந்தது. காலப்போக்கில் அத்தகைய திட்டமிடல் குறைந்துவிட்டது எனப் பிரதமா் ஷாபாஸ் கூறியதாக நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com