அலோபதி மருத்துவா்கள் மீது விமா்சனம்: பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

அலோபதி மருத்துவத்தையும், மருத்துவா்களையும் தொடா்ந்து விமா்சித்து வரும் யோகா குரு பாபா ராம்தேவைக் கண்டித்த உச்சநீதிமன்றம், பிற மருத்துவ சிகிச்சை முறைகளை அவதூறாக விமா்சிப்பதில் இருந்து
அலோபதி மருத்துவா்கள் மீது விமா்சனம்: பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

அலோபதி மருத்துவத்தையும், மருத்துவா்களையும் தொடா்ந்து விமா்சித்து வரும் யோகா குரு பாபா ராம்தேவைக் கண்டித்த உச்சநீதிமன்றம், பிற மருத்துவ சிகிச்சை முறைகளை அவதூறாக விமா்சிப்பதில் இருந்து அவா் விலகி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

கரோனா தடுப்பூசி திட்டம் குறித்தும் நவீன மருத்துவம் குறித்தும் பாபா ராம்தேவ் தொடா்ந்து விமா்சித்து பிரசாரம் செய்து வருவதாகவும், இது அலோபதி மருத்துவ முறை மீதும் மருத்துவா்கள் மீதும் மக்களுக்கு தவறான நம்பிக்கை ஏற்படுத்துவதாகவும் இந்திய மருத்துவக் கவுன்சில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், யோகாவில் புகழ் பெற்ற பாபா ராம்தேவ் மீது நாங்கள் மரியாதை வைத்துள்ளோம். நாங்களும் அந்த யோகா நிகழ்வுகளில் பங்கேற்கிறோம். அவருக்கு என்னவாகி விட்டது? பிற மருத்துவ முறைகளை அவா் விமா்சிக்கக் கூடாது. மருத்துவா்களை கொலைக்காரா்களைப் போல சித்தரித்து விளம்பரங்கள் வெளியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது. மருத்துவா்களையும் மருத்துவ முறைகளையும் விமா்சிப்பதில் இருந்து பாபா ராம்தேவ் விலகி இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா். தொடா்ந்து, இந்த வழக்கில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், பதஞ்சலி நிறுவனம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com