சாகித்திய அகாதெமி: யுவ புரஸ்கார், பால சாகித்திய விருதுகள் அறிவிப்பு- தமிழ் மொழிப் பிரிவில் பி.காளிமுத்து, ஜி.மீனாட்சி தேர்வு

நிகழ் ஆண்டுக்கான (2022) யுவ புரஸ்கார், பால சாகித்திய புரஸ்கார் விருதுகளை சாகித்திய அகாதெமி புதன்கிழமை அறிவித்துள்ளது.
சாகித்திய அகாதெமி: யுவ புரஸ்கார், பால சாகித்திய விருதுகள் அறிவிப்பு- தமிழ் மொழிப் பிரிவில் பி.காளிமுத்து, ஜி.மீனாட்சி தேர்வு

நிகழ் ஆண்டுக்கான (2022) யுவ புரஸ்கார், பால சாகித்திய புரஸ்கார் விருதுகளை சாகித்திய அகாதெமி புதன்கிழமை அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பி.காளிமுத்து, ஜி.மீனாட்சி ஆகியோரின் படைப்புகள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இலக்கிய உலகில் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
இலக்கிய படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு "யுவ புரஸ்கார்' விருதையும், சிறுவர் இலக்கியத்துக்கான "பால சாகித்திய புரஸ்கார்' விருதையும் இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு சாகித்திய அகாதெமி வழங்கி
வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2022) இரு விருதுகளும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.
சாகித்திய அகாதெமியின் தலைவர் சந்திரசேகர கம்பார் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் முடிவில், மேலும் 23 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், 22 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிப் பிரிவில்...: தமிழ் மொழிப் பிரிவில் "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' எனும் கவிதை தொகுப்புக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பி. காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.மீனாட்சி எழுதிய "மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதை நூலுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு விருதுகளும் தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பால சாகித்திய புரஸ்கார் விருது, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி வழங்கப்படும் என்றும், யுவ புரஸ்கார் விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.
தமிழ் தவிர, அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, ஹிந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, நேபாளி, ஒடியா, தெலுங்கு, சம்ஸ்கிருதம், உருது உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com