
சௌத்ரி பூபேந்திர சிங்
உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு புதிய பாஜக தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தநிலையில், தற்போது மாநிலத் தலைவராக சௌத்ரி பூபேந்திர சிங்(54) நியமிக்கப்பட்டுள்ளார்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமச்சரவையில் பூபேந்திர சிங் பஞ்சாயத் ராஜ்(ஊரக வளர்ச்சித் துறை) அமைச்சராகவும் மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ளார்.
அதேபோல், திரிபுரா மாநிலத்தின் பாஜக தலைவராக ராஜீப் பட்டாச்சார்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.