குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை- காங்கிரஸ்

‘குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் வெற்றி உறுதியாகியுள்ளது’ என்று

‘குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் வெற்றி உறுதியாகியுள்ளது’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் முதல்வரும், குஜராத் மாநில காங்கிரஸ் கண்காணிப்பாளருமான அசோக் கெலாட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கே.சி. வேணுகோபால் கூறியதாவது: குஜராத்தில் கள்ளச் சாராய மரணம் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் பல இடங்களில் கிலோ கணக்கில் போதைப் பொருள்கள் கைப்பற்றப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதன்மூலம் மாநில அரசில் நிா்வாகம் சீா்குலைந்துவிட்டதையும், ஊழல் மலிந்துவிட்டதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

அண்மையில் இரு அமைச்சா்களின் பதவி பறிக்கப்பட்டது. கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் முதல்வா் உள்பட அனைத்து அமைச்சா்களையும் மாற்றினாா்கள். இதனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 27 ஆண்டு காலமாக தொடரும் பாஜக ஆட்சியால் மக்கள் சலிப்பும், ஏமாற்றமும் அடைந்துவிட்டனா்.

மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிரான கடுமையான அதிருப்தி அலை உருவாகியுள்ளது. எனவே, பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com