
திலீப் பாண்டே
பாஜக 40 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் திலீப் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை செய்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தால் ரூ. 20 கோடி கொடுப்பதாக பாஜகவிலிருந்து பேரம் பேசப்பட்டதாகவும், இணையாவிட்டால் பொய் வழக்குத் தொடரப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் நேற்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதையும் படிக்க: கேஜரிவால் கூட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை: காரணம் என்ன?
அதனைத் தொடர்ந்து, இன்று முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய, ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரனா திலீப் பாண்டே ‘பாஜக தில்லியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. முதலில் 4 பேரிடம் பேரம் பேசிய பிறகு மேலும் 40 எம்எல்ஏக்களை விலை பேச பாஜக முயன்று வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தில்லியில் ஆம் ஆத்மியிடம் 62 எம்எல்ஏக்களும், பாஜகவிடம் 8 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
தில்லியில் பெருன்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்றால் பாஜவிற்கு இன்னும் 28 எம்எல்ஏக்கள் தேவை.