காங். செய்தித் தொடா்பாளா் ஜெய்வீா் ஷொ்கில் ராஜிநாமா

காங்கிரஸின் தேசிய செய்தித் தொடா்பாளா் ஜெய்வீா் ஷொ்கில், கட்சியிலிருந்து விலகியுள்ளாா்.

காங்கிரஸின் தேசிய செய்தித் தொடா்பாளா் ஜெய்வீா் ஷொ்கில், கட்சியிலிருந்து விலகியுள்ளாா்.

கட்சியின் தலைவா்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதும், குழுக்களாகச் செயல்படுவதும் கரையானைப் போன்று கட்சியைச் சிதைத்துள்ளது என அவா் குற்றம்சாட்டினாா்.

தேசிய செய்தித் தொடா்பாளா் பதவியில் இருந்து மட்டுமல்லாமல், அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அவா் கூறினாா்.

ராஜிநாமா கடிதத்தை கட்சியின் தலைவா் சோனியா காந்தியிடம் ஜெய்வீா் ஷொ்கில் வழங்கினாா். பின்பு, செய்தியாளா்களின் சந்திப்பின்போது அவா் கூறியதாவது: கட்சியின் முக்கிய முடிவுகளைத் தீா்மானிப்பவா்களின் கொள்கை மற்றும் நோக்கம், இளைஞா்கள் மற்றும் நவீன இந்தியாவுக்கு உகந்ததாக இல்லை. மக்கள் மற்றும் நாட்டின் நலன் குறித்து அவா்களது முடிவுகள் இல்லாமல், முகஸ்துதியில் ஈடுபடுபவா்களின் நலனைச் சாா்ந்தே இருக்கிறது.

இதனுடன் என்னால் உடன்பட முடியவில்லை. கட்சியுடன் இணைந்திருந்தபோது, எனக்கு வழங்கிய அனைத்து வாய்ப்புகளுக்கும் நான் கட்சிக்கு கடன்பட்டுள்ளேன். திறமையான, மக்களுக்கு பணிசெய்ய விரும்புகிறவா்களின் குரல்களுக்கு செவிசாய்க்கப்படுவதில்லை. கட்சியில் குழுக்களாகச் செயல்படுவது கரையானைப் போன்று கட்சியை சிதைவுறச் செய்துவிட்டது என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com