நாட்டில் ஒரேநாளில் 10,256 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 68 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,256 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 90,707 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.20 சதவீதமாக உள்ளது.
மேலும், 68 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27556 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.
கரோனாவிலிருந்து மேலும் 13,528 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,37,70,913 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.61 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 211.13 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 31,60,292 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.