காங்கிரஸிலிருந்து எம்.ஏ. கான் விலகல்

காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, கட்சியில் இருந்து கட்சியின் தெலங்கானாவைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எம்.ஏ.கான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.  
காங்கிரஸிலிருந்து எம்.ஏ. கான் விலகல்


ஹைதராபாத் (தெலங்கானா): காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தெலங்கானாவைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எம்.ஏ.கான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்திலிருந்தும் விலகினார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.ஏ. கான், குலாம் நபி ஆசாத் போன்று கட்சியின் மீது அடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அவர் எழுதிய கடிதத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கு தயாராக இல்லை. அதனால் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பண்டிட் நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி தலைமையில் இயங்கிய அதே அர்ப்பணிப்புடன், தற்போது கட்சியை வழிநடத்துவதற்கும், நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்ற எந்த முயற்சியும் உயர்மட்ட தலைமை மேற்கொள்ளாததால், மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனாலேயே கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாததால், மாணவப் பருவத்திலிருந்தே நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கட்சியில் இருந்த நான், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுகிறேன். 

“கட்சியின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்தி காரணம்.” காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதில் இருந்து அவர் தன்னிச்சையாகவே செயல்படத் தொடங்கிவிட்டார். அவருடைய சிந்தனை செயல்முறைகள் வித்தியாசமாக உள்ளது. இது கட்சியின் தொண்டர் முதல் உயர்மட்டக் குழுவினர் வரை யாருக்கும் உடன்பாடில்லை. அதனாலேயே கட்சிக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுகிறார்கள். 

மேலும், மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்திக்கு பழகத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது பழைய பெருமையை மீட்டெடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு அளிக்க முற்றிலும் தவறிவிட்டது என்று கான் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com