கேரளத்தில் தொடர் கனமழையால் நிலச்சரிவு: வீடு மண்ணில் புதைந்து ஒருவர் பலி

கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலையோர கிராமங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். மேலும், இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், கனமழை காரணமாக குடையாத்தூர் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள ஒரு வீடு முற்றிலும் மண்ணில் புதைந்தது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 4 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை தொடர்வதால் நிலச்சரிவு ஏற்படும் அச்சம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com