தில்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.
நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் கேஜரிவால்
நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் கேஜரிவால்


தில்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

தில்லி ஆளுநரை பதவி விலக வலியுறுத்தி ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும், மதுவிலக்கு கொள்கை மூலம் ஊழல் செய்ததாகக் கூறப்படும் புகாரில் சிக்கியிருக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலகக் கோரி பாஜக எம்எல்ஏக்களும் தில்லி சட்டப்பேரவையில் விடிய விடிய போட்டி போராட்டம் நடத்தியிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார் முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

இதையும் படிக்க.. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல: உயா்நீதிமன்றம்
 
தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை நம்பிக்கைத் தீா்மானத்தை தாக்கல் செய்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘மற்ற மாநிலங்களில் ‘ஆபரேஷன் தாமரை’ வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மிகவும் நோ்மையாக இருப்பதால் இங்கு தோல்வியடைந்துள்ளது என்பதை இந்த நம்பிக்கை தீா்மான நிரூபிப்பதாக உள்ளது’ என்றாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் யாரையும் வேட்டையாட முடியாததால், தனது அரசை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட ’ஆபரேஷன் தாமரை’ தோல்வியடைந்தது என்று கூறிய கேஜரிவால், அடுத்த 15 நாள்களில் ஜாா்க்கண்ட் அரசை பாஜக கவிழ்க்க முயற்சிக்கும் என்றும் குற்றம் சாட்டினாா். 

ஆம் ஆத்மி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வை கூட பாஜக விலைக்கு வாங்க முடியாது என்று சவால் விட்ட கேஜரிவால், “‘ஆபரேஷன் தாமரை’ மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் பிற மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தில்லியில் தோல்வியடைந்தது என்பதை காட்டவே இந்த நம்பிக்கைத் தீா்மானம். ஒவ்வொரு ஆம் ஆத்மி எம்எல்ஏவும் நோ்மையானவா்கள். மணிப்பூா், பிகாா், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை பாஜக கவிழ்த்தது. சில இடங்களில் ரூ.50 கோடி வரை கொடுத்துள்ளனா் என்றும் குற்றம் சாட்டினாா்.

இதற்கிடையே, தனது அரசின் மதுபான ‘ஊழலில்‘ இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அரசியல் பிரசாரத்திற்காகவும், நாடகங்களில் ஈடுபடுவதற்காகவும் சட்டப்பேரவையைபயன்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com