
தில்லியில் இரண்டு நாள்கள் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.5) தொடக்கிவைத்தார்.
2024 மக்களவைத் தோ்தல், நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் தோ்தலில் வாக்களித்த பிரதமா் மோடி உடனடியாக தில்லி திரும்பி இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தொடக்கிவைத்தார்.
முன்னதாக பாஜகவின் முன்னோடிகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார். கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் இந்த கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இருந்தும் கட்சியின் மூத்த தலைவா்கள், நிா்வாகிகள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர். கட்சியின் மாநிலத் தலைவா்கள், பொதுச் செயலா்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இதையொட்டி தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.