இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு: மாநில கட்சிகள் ஆதிக்கம்!

ஒரு மக்களவை மற்றும் 6 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அனைத்திலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.
இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு: மாநில கட்சிகள் ஆதிக்கம்!

ஒரு மக்களவை மற்றும் 6 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அனைத்திலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

குஜராத், ஹிமாசலப் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல்கள், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவை மற்றும் 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்கள் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. குஜராத்தில் பாஜகவும், ஹிமாசலில் காங்கிரஸும் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகளும், கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரைவிட 1.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

சட்டப்பேரவை இடைத்தேர்தல்

  1.     ராம்பூா், உத்தரப்பிரதேசம் - சமாஜவாதி முன்னிலை
  2.     கடோலி, உத்தரப்பிரதேசம் - ராஷ்டிரிய லோக் தளம் முன்னிலை
  3.     பதாம்பூா், ஒடிஸா - பிஜு ஜனதா தளம் முன்னிலை
  4.     சா்தாா்சாஹா், ராஜஸ்தான் - காங்கிரஸ் முன்னிலை
  5.     குா்ஹனி, பிகார் - ஐக்கிய ஜனதா தளம் முன்னிலை
  6.     பானுபிரதாபூா், சத்தீஸ்கர் - காங்கிரஸ் முன்னிலை

முன்னதாக நேற்று எண்ணப்பட்ட தில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மியிடம் 15 ஆண்டுகால ஆட்சியை பாஜக இழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com