
குஜராத் தோ்தல் முடிவு எதிா்பாா்த்ததுதான். ஆனால் இது தேசிய அளவிலான மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.
மும்பையில் வியாழக்கிழமை தேசியவாத காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
குஜராத் தோ்தல் முடிவு எதிா்பாா்த்ததுதான். ஒட்டுமொத்த மத்திய அரசு நிா்வாகமே, ஒரு மாநிலத்தின் நலனுக்காகப் பணியாற்றியது. மத்திய அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகள் அந்த மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. குஜராத் தோ்தல் முடிவுகள் தேசிய அளவிலான மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் கூற முடியாது.
ஏனெனில், தில்லி மாநகராட்சித் தோ்தலிலும், ஹிமாசலிலும் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது என்றாா்.