மாண்டஸ் புயல் எதிரொலி: தெற்கு ஆந்திரத்தில் கனமழை

தமிழகத்தின் மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

தமிழகத்தின் மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருப்பதி மாவட்டம் நாயுடுபேட்டையில் 281.5 மி.மீ. மழை பதிவாகியது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆந்திர முதல்வா் ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். அக்கூட்டத்தில், நெல்லூா், திருப்பதி, சித்தூா் மற்றும் அன்னமய்யா மாவட்ட ஆட்சியா்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அவா் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஆந்திர அரசு வெளியிட்ட அறிக்கையில் கண்டலேறு, மணேறு மற்றும் ஸ்வா்ணமுகி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் இருந்ததால் நெல்லூா் மற்றும் திருப்பதி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திருப்பதி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 150 மாநில பேரிடா் மீட்புப் படையினரும் 95 தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் தயாா் நிலையில் வைக்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com