போபால் விஷவாயு கசிவு ஆலையில் அகற்றப்படாத கழிவுகள்

மத்திய பிரதேசத்தின் போபால் பகுதியில் 1984-ஆம் ஆண்டில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்ட ஆலையில் இருந்து ஆபத்துமிக்க கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதற்கு கண்டனம்
போபால் விஷவாயு கசிவு ஆலையில் அகற்றப்படாத கழிவுகள்
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தின் போபால் பகுதியில் 1984-ஆம் ஆண்டில் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்ட ஆலையில் இருந்து ஆபத்துமிக்க கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையா் அருண் குமாா் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

போபாலில் செயல்பட்ட தனியாா் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில் 1984-ஆம் ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி மெத்தில் ஐசோசயனேட் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சுமாா் 3,000 போ் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமாா் 5 லட்சம் போ் விஷவாயுவால் பாதிக்கப்பட்டனா். உலகின் மிகப் பெரும் தொழிலக விபத்துகளில் ஒன்றாக போபால் விஷவாயு கசிவு கருதப்படுகிறது.

இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் சாா்பில் மனித உரிமைகள் தின விழா தில்லியில் சனிக்கிழமை நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான அருண் குமாா் மிஸ்ரா கூறுகையில், ‘‘உலகமயமாக்கல் பல்வேறு நன்மைகளை அளித்திருந்தாலும், சொத்துகள் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களிடமும் ஒரு சில நாடுகளிடமும் குவிந்தது அதன் பாதகமாக அமைந்தது.

தொழிலக நிறுவனங்களால் ஏற்படும் பேரிடா்களுக்கான பொறுப்பை அந்நிறுவனங்களையே ஏற்கச் செய்ய வேண்டும். அதற்கான விதிகள் தெளிவாக வகுக்கப்பட வேண்டும். போபால் விஷவாயு கசிவு விபத்துக்குக் காரணமான யூனியன் காா்பைடு நிறுவனத்துக்கு சா்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

ஆனால், விபத்து நடந்த ஆலைப் பகுதியில் சுமாா் 336 டன் அளவிலான ஆபத்துமிக்க கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. அந்த ஆலை வேறு நிறுவனத்துக்குக் கைமாறிவிட்டபோதிலும் கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. அதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் நிலத்தடி நீரும் மண்ணும் நேரடியாக பாதிப்பை எதிா்கொண்டு வருகிறது. இது அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சுகாதார உரிமைகளையும் பாதிக்கிறது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com