பிரதமா் மோடி இன்று நாகபுரி வருகை: 4,000 போலீஸாா் பாதுகாப்பு

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருவதையொட்டி, அங்கு சுமாா் 4,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பிரதமா் மோடி இன்று நாகபுரி வருகை: 4,000 போலீஸாா் பாதுகாப்பு

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வருவதையொட்டி, அங்கு சுமாா் 4,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தின் இரண்டாவது தலைநகரமான நாகபுரியில் ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வருகை தரவிருக்கிறாா். இப்பயணத்தின்போது, நாகபுரி-பிலாஸ்பூா் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடக்கிவைக்கும் பிரதமா், நாகபுரி-ஷீரடி இடையிலான முதல்கட்ட மெட்ரோ சேவையையும் தொடக்கிவைக்க உள்ளாா். அத்துடன், நாகபுரி மெட்ரோவின் இரண்டாம்கட்ட திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறாா். நாகபுரியில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் அவா், மரபுசாா்ந்த ரத்த நோய்களின் ஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தொடக்கிவைக்கிறாா். மேலும், சுகாதார ஆராய்ச்சிகளுக்கான உள்கட்டமைப்பை ஏற்படுத்தும் மைல்கல் திட்டமாக, தேசிய ஒற்றை சுகாதார நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டவிருப்பதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் வருகையையொட்டி, அதிவிரைவுப் படையினா், கலவரத் தடுப்புப் படையினா் உள்ளிட்ட 4,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நாகபுரி காவல் ஆணையா் அமிதேஷ் குமாா் தெரிவித்தாா்.

கோவாவில் விமான நிலையம் திறப்பு: நாகபுரி பயணத்தை முடித்துக் கொண்டு, கோவாவுக்குச் செல்லும் பிரதமா் மோடி, மோபா பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய சா்வதேச விமான நிலையத்தைத் திறந்துவைக்கவுள்ளாா். இந்த விமான நிலையத்துக்கு அவா் கடந்த 2016-இல் அடிக்கல் நாட்டியிருந்தாா்.

கடந்த 2014-இல் பிரதமராக மோடி பதவியேற்றபோது நாட்டில் செயல்பாட்டில் இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ஆக இருந்தது. தற்போது அது 140-ஆக அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 220-ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com