
உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜவாதி கட்சியின் டிம்பிள் யாதவ் மக்களவையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார்.
கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் மெயின்புரி தொகுதிக்கான வாக்கு எண்ணிகை டிச. 8ஆம் தேதி நடைபெற்றது.
இதில், டிம்பிள் யாதவ் 6,17,625 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர்கள் ரகுராஜ் சிங்கைவிட 2,88,136 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையும் படிக்க | 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலையில்லை: ராகுல் தாக்கு!
இதனைத் தொடர்ந்து மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் இன்று டிம்பிள் யாதவ் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.