பெங்களூரு: புனே ஆய்வுக்கூடம் அளித்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவே முதல் முறை. நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஜிகா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள எங்கள் துறை தயார் நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, புனேவில் உள்ள 67 வயது நபருக்கு கடந்த மாதம் இறுதியில் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவர் நாசிக் பகுதியில் வசித்து வந்த நிலையில், நவம்பர் 6ஆம் தேதி புனே வந்திருந்த போது ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
நவம்பர் 16ஆம் தேதி கடும் காய்ச்சல், இருமல், மூட்டு வலி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பிறகு சிகிச்சையின் பயனாக அவர் குணமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


