பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணிக்க கேரள அரசு முடிவு?

அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் உரையை புறக்கணிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன்

அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் உரையை புறக்கணிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநில ஆளுநர் உரை இடம்பெறுவது அவசியம். இந்நிலையில், வரும் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையை தவிர்க்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கான் பொறுப்பேற்றத்தில் இருந்தே முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுடன் மோதல் போக்கே நிலவு வருகின்றது.

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கேரள ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டது. மாநில அரசை நேரடியாக ஆளுநர் ஆரிஃப் கான் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், டிசம்பரில் தொடங்கிய கேரள சட்டப்பேரவை கூட்டத்தில், கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் 7-ஆவது கூட்டத்தொடர் தற்காலிகமாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு மாநில ஆளுநரிடம் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தகவல்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால், கேரள அமைச்சரவை இதுவரை ஆளுநரிடன் எவ்வித தகவலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவையின் 7-வது அமர்வு புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு மீண்டும் தொடங்கி, அதில் பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநரின் தொடக்க உரையை மாநில அரசு புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com