இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்: முர்மு

இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். 
இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்: முர்மு
இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்: முர்மு

இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். 

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் ரயில்வேயின் பயிற்சியாளர்களிடம் பேசிய முர்மு, 

ரயிலில் பயணிக்கும் மக்கள் இனிய நினைவுகளைச் சுமந்துசெல்லும் வகையில் வசதியாகப் பயணம் செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 

மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் தேவைகளை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவத்தை வழங்க வேண்டும். 

இந்திய ரயில்வே இடைவெளிகளைக் குறைப்பதிலும், அனைவரையும் உள்ளடக்கிய ஆத்மநிர்பர் பாரத என்ற கனவை நனவாக்குவதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.  

இன்று இந்தியா தேசிய மற்றும் உலக அளவில் முன்னேறி வரும் நிலையில், மக்கள் மற்றும் பொருட்களின் அதிக இயக்கத்தை நாடு காண்கிறது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்.

எனவே, இந்திய ரயில்வே சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும் மற்றும் பாதுகாப்பான, நேரத்தை மிச்சப்படுத்தும், வசதியான மற்றும் உயர்தர போக்குவரத்து சேவைகளுக்கான மேம்பட்ட அம்சங்களைச் சேர்க்க புதிய வழிகளை ஆராய வேண்டும். 

ரயில்வேயில் அதிக எண்ணிக்கையிலான பெண் அதிகாரிகள் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். பெண்கள் ரயில்வே சேவைகளை அதிகம் தேர்வு செய்ய வேண்டும். இந்திய இரயில்வே நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

இந்திய ரயில்வேயின் சேவைகளை மேலும் மேலும் திறமையானதாகவும், தடையற்றதாகவும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதை நீங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com