மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக துணைத் தலைவர் ஹரிவஷ் சிங் தெரிவித்துள்ளார். 
மாநிலங்களவை  (கோப்புப் படம்)
மாநிலங்களவை (கோப்புப் படம்)


தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் தெரிவித்துள்ளார். 

அருணாசலப் பிரதேச எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கோரிக்கை வைக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி எல்லைப் பிரச்னையை விவாதிக்க வலியுறுத்தினர். எனினும் அவை நடவடிக்கைகள் கட்டுப்பாட்டை இழந்ததால், நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் துணைத் தலைவர்  கட்டுப்படுத்துவதற்காக ஹரிவன்ஷ் சிங் அறிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் மோதலில் ஈடுபட்டதால் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com