பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

வடகிழக்கின் வளர்ச்சிக்கான தடைகளை எனது அரசு நீக்கியுள்ளது: பிரதமர் மோடி

தனது அரசின் 8 ஆண்டுகால ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இருந்த அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Published On :

தனது அரசின் 8 ஆண்டுகால ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இருந்த அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்கள் குழுவின் 50வது ஆண்டுகால நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.

அந்த நிகழ்வில் பிரதமர் பேசியதாவது: வான்வழிப் பயணத்தை வடகிழக்குப் பகுதிக்கு கொண்டுவந்துள்ளதன் மூலம் விவசாயிகளால் அவர்களது விளைபொருள்கள்களை எளிதில் ஏற்றுமதி செய்ய முடிகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர். வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்கள் அனைத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான எங்களது அரசு நீக்கியுள்ளது. வடகிழக்குப் பகுதி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. ஊழல், வேற்றுமை, வன்முறை மற்றும் வாக்கு வங்கி அரசியலை எங்களது அரசு வடகிழக்குப் பகுதியில் நீக்கியுள்ளது. முன்னதாக, வடகிழக்குப் பகுதியினை பிளவுப்படுத்தும் முயற்சி நடந்தது. நாங்கள் அந்த பிளவுபடுத்தும் முயற்சினை தடுத்துள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.