அடுத்தது எந்த மாநிலத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம்?

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணமானது, ராஜஸ்தானில் இருந்து அடுத்தது தில்லிக்கு நுழையவிருக்கிறது.
அடுத்தது எந்த மாநிலத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம்?
அடுத்தது எந்த மாநிலத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம்?

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணமானது, ராஜஸ்தானில் இருந்து அடுத்தது தில்லிக்கு நுழையவிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஒற்றுமை நடைப்பயணம், டிசம்பர் 24-ம் தேதி(சனிக்கிழமை) மாலை முதல் தில்லிக்குச் சென்றடைய உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து ஏழு மாநிலங்களில் நிறைவடைந்து, தில்லிக்கு நடைப்பயணக் குழுவினர் வருகின்றனர். அதன்பிறகு ஒன்பது நாள்கள் ஓய்வெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்போர் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட உள்ளனர். ஜனவரி 3, 2003  அன்று மீண்டும் நடைப்பயணம் தொடங்க உள்ளது. 

இதற்கிடையில், ஹரியானா மாநிலத்தில் முதல் கட்ட யாத்திரை புதன்கிழமை முதல் வெள்ளி வரை நடைபெறவுள்ளது. 

ஃபிரோஸ்பூர் ஜிர்கா முதல் ஃபரிதாபாத் வரையிலான இந்தக் கட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com