கரோனா தடுப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பசவராஜ் பொம்மை

அரசு பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். 
கரோனா தடுப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பொம்பை
கரோனா தடுப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பொம்பை

கரோனா பாதிப்பும், ஒமைக்ரான் பாதிப்பும் ஒரு சில நாடுகளில் வேகமாகப் பரவிவரும் நிலையில், அரசு பரிந்துரைக்கும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கரோனா நிலைமை மற்றும் மாநிலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அவரசக் கூட்டம் நடத்தப்பட்டது. 

இதுதொடர்பாக பொம்மை கூறுகையில், 

கரோனா சென்றுவிட்டது என்று நிம்மதியாக இருந்த நிலையில், அது மற்ற நாடுகளில் மோசமாகிவருவது கவலைக்குரியது. 

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை விட வைரஸ்கள் வேகமாக நகரும் என்பதால், மாநில மற்றும் மத்திய அரசுகள் இதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது. 

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பூஸ்டர் டோஸ் செலுத்த நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் முதல் மற்றும் இரண்டாவது டோஸில் காட்டப்பட்ட ஆர்வம் பூஸ்டர் டோஸில் காணப்படவில்லை. இது நாடு முழுவதும் நடந்துள்ளது. 

பூஸ்டர் டோஸிற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். மாநில மக்களின் ஒத்துழைப்பையும் கோருகிறேன். தடுப்பூசியின் முதல் இரண்டு டோஸ்களை நூறு சதவீதம் வெற்றிகரமாக முடித்துள்ளோம், ஆனால் பூஸ்டர் டோஸ் 20 சதவீத மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை இங்குள்ள சட்டப்பேரவையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மக்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் இதுபோன்ற தடுப்பு முகாம்களை நடத்துவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com