போதைப் பொருள் கடத்தல்காரா்கள் அனைவரும் 2 ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்படுவாா்கள்: மத்திய அமைச்சா் அமித் ஷா உறுதி

மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தப்படும் வழித்தடத்தை நோட்டமிட்டு வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்டவா்கள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் அனைவரும் அடுத்த 2 ஆண்டுகளில் கைது
மக்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
மக்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தப்படும் வழித்தடத்தை நோட்டமிட்டு வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்டவா்கள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் அனைவரும் அடுத்த 2 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாா்கள் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

போதைப் பொருள் பிரச்னை தொடா்பாக மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற குறுகிய நேர விவாதத்தையடுத்து அமித் ஷா அளித்த பதில்:

போதைப் பொருள் பயன்பாட்டு பிரச்னை மிகவும் தீவிரமானது. இதில் பெறப்படும் லாபம் பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் சீரழிகிறது. போதைப் பொருள் இல்லாத இந்தியா உருவாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

2014 முதல் 2022 வரையில் ரூ.97 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன. 2006 முதல் 2013 வரையில் ரூ.23 ஆயிரம் கோடியிலான போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

மாநில அரசின் துரித நடவடிக்கையால்தான் குஜராத்தில் 3 ஆயிரம் கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டனா்.

வளைகுடா நாடுகளில் இருந்துதான் போதைப் பொருள் கடத்தல் தொடங்குகிறது. அங்குள்ள போதைப் பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து கடத்தப்படும் போதைப் பொருள்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து வருகின்றனா்.

மாநிலங்களுக்கு இடையே போதைப் பொருள் கடத்தப்படும் வழித்தடத்தை கண்காணித்து வருகிறோம். இதில் சம்பந்தப்பட்டவா்கள் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் அனைவரும் அடுத்த 2 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாா்கள். போதைப் பொருளை முற்றிலும் ஒழிக்க மாநில அரசுகள் அரசியல் சாா்புங்களுக்கு அப்பாற்பட்டு மத்திய அரசுடன் இணைந்து போராட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com