மக்கள் தானாக முன்வந்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: சுகாதார அமைச்சர்

கரோனா பாதிப்பு சில நாடுகளில் திடீரென அதிகரித்து வருவதைக் கண்டு மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று ஹரியாணா சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
மக்கள் தானாக முன்வந்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: சுகாதார அமைச்சர்

கரோனா பாதிப்பு சில நாடுகளில் திடீரென அதிகரித்து வருவதைக் கண்டு மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தானாக முன்வந்து பின்பற்ற வேண்டும் என்றும் ஹரியாணா சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

கரோனா தொடர்பான வழிகாட்டுதல்கள், முழுமையாக மாநிலத்தில் செயல்படுத்தப்படும். மக்கள் பீதியடைய வேண்டிய அவசியமில்லை. 

முகக்கவசம் அணிதல், கைசுத்தத் திரவத்தைப் பயன்படுத்துவது போன்ற கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மக்கள் தாங்களாகவே முன்வந்து பின்பற்ற வேண்டும். 

மாநிலத்தில் போதுமான அளவு மருந்து இருப்பில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்டி-பிசிஆர் சோதனை வசதி உள்ளது. வென்டிலேட்டர்களும் போதுமான எண்ணிக்கையில் உள்ளன. 

முந்தைய கரோனாவின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு, அனைத்து வகையிலும் கரோனாவுக்கு எதிராகப் போராட நாங்கள் தயாராக உள்ளோம். 

முன்னதாக ஆக்ஸிஜன் பிரச்னை இருந்தது. ஆனால் தற்போது 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பிஎஸ்ஏ ஆலைகளை நிறுவியுள்ளோம். எனவே, ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்றார்.  

மேலும், நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுமாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com