அப்பாவின் உயிரை காப்பாற்றும் சட்டப் போராட்டத்தில் சிறுமி வெற்றி!

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு 17 வயது மகள் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.
அப்பாவின் உயிரை காப்பாற்றும் சட்டப் போராட்டத்தில் சிறுமி வெற்றி!

கொச்சி: கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு 17 வயது மகள் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் கோலாழியில் வசித்து வருபவர்  பிஜி பிரதீஷ்(48). இவருக்கு மனைவி மற்றும் 17 வயது நிரம்பிய மகள் உள்ளனர். இந்நிலையில் தான் தேவானந்தா கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள், அவருக்கு  கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை அளித்தாலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என தெரிவித்தனர். இதனால் சோகத்தில் மூழ்கிய அவரது குடும்பத்தினர் மற்ற குடும்ப உறுப்பினர்களின் கல்லீரல் அவருக்கு பொருந்துமான என்ற சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், அவருக்கும் தனது 17 வயதுடைய மகளின் கல்லீரை தவிரை வேறு யாருடையதும் பொருந்தவில்லை.  

இந்நிலையில், அவரது 17 வயது மகளான சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்காக தானம் வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். ஆனால், சிறுமியின் தானத்தை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் மனித உறுப்பு மற்றும் திசு மாற்றுச் சட்டம் 1994 இன் படி கல்லீரல் தானம் தரும் ஒருவர் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும் என்பதால் சிறுமியின் தானத்தை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

உயர்நீதிமன்றத்தில் மனு: இந்நிலையில், 48 வயதான தந்தை ஹெபடோசெல்லுலர் கார்சினோமா, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயுடன் சிதைந்த நாள்பட்ட கல்லீரல் நோயுடன் போராடுகிறார். அவரது மகளான என்னைத் தவிர குடும்பத்தினரின் யாருடைய கல்லீரலும் அவருக்கு பொருந்தவில்லை. நான் கல்லீரல் தானத்தை செய்ய தயாராக உள்ளேன். உறுப்பு தானம் செய்வதில் மருத்துவத் தடைகள் எதுவும் இல்லை. அப்பாவின் உயிரை காப்பாற வேண்டும்.  இருப்பினும், கல்லீரல் தானம் செய்வதில் உள்ள மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் 1994-இன் கீழ் உள்ள விதிகள் ஒரு சிறியவருக்கு உறுப்பு தானம் செய்ய அனுமதிக்காது என கூறப்படுகிறது. எனவே, கல்லீரல் தானம் செய்வதில் உள்ள விதிகளில் தளர்வு செய்து, தனது கல்லீரலின் ஒரு பகுதியை நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு தானம் செய்ய சட்டப்பூர்வ அனுமதி அளிக்க வேண்டும் எனக்கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் அவரது 17 வயது மகளான சிறுமி தேவானந்தா மனுத்தாக்கல் செய்தார். 

இந்த மனு புதன்கிழமை நீதிபதி வி.ஜி. அருண் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் பி.ஆர் ஷாஜி வாதாடினர். வாதங்களை கேட்ட நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறையில் அறிவுறுத்தல்களை பெற்று அதன் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் அரசு வழக்குரைஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், தேவானந்தா தனது கல்லீரலின் ஒரு பகுதியை நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு தானம் செய்ய சட்டப்பூர்வ அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகினார். நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு அவரது மகள் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள்: மேலும், தேவானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய அமர்வு, அவரைப் போன்ற குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறினார்.

பாராட்டு: "தேவானந்தா நடத்திய இடைவிடாத போராட்டம் இறுதியாக வெற்றியடைந்துள்ளது என்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற சிறுமியின் போராட்டத்தை நீதிமன்றம் பாராட்டுகிறது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

தேவானந்தா தனது முடிவின் விளைவுகளைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பதாகவும், நன்கொடையாளர் 18 வயதை 5 மாதங்களில் அடைவார் என்பதால், மாற்று அறுவை சிகிச்சையை அனுமதிக்கும் மனுவை நிராகரிக்க வேண்டாம் என்றும் ஒரு மனுவை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாவின் உயிரை காப்பாற்றுவதற்காக 17 வயது மகளான சிறுமியின் போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com