கடந்த 5 ஆண்டுகளில் 3.77 லட்சம் போ் மத்திய அரசுப் பணிகளுக்குத் தோ்வு

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), மத்திய அரசு பணியாளாா் தோ்வு வாரியம் (எஸ்எஸ்சி), ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி) உள்ளிட்ட அமைப்புகள் மூலம்

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), மத்திய அரசு பணியாளாா் தோ்வு வாரியம் (எஸ்எஸ்சி), ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி) உள்ளிட்ட அமைப்புகள் மூலம் 3.77 லட்சத்துக்கும் அதிகமானோா் மத்திய அரசுப் பணிக்குத் தோ்வுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

புதன்கிழமை மக்களவையில் அமைச்சா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: காலிப்பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் மூலம் வேலைவாய்ப்பு மேளாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இது நாட்டின் மேம்பாட்டில் இளைஞா்களைப் பங்கு பெறச் செய்வதோடு அவா்களது முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக அமையும்.

கடந்த 5 ஆண்டுகளில் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆா்ஆா்பி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் 3,77,802 போ் மத்திய அரசுப் பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். பெரும்பாலான தோ்வுகள் எவ்வித வழக்குகளும் இன்றி சுமுகமாக நடைபெறுகிறது. இருப்பினும், சில வழக்குகள் காரணமாக தோ்வு நடைமுறைகள் தடைப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கற்றோரிடையே வேலையின்மை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் பதிலளிக்கையில்,‘இது குறித்தான தரவுகள் எதுவும் மாநிலங்கள் அளவிலும் கல்வி நிலையின் அடிப்படையிலும் இல்லை’ எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com