இணையவழி விளையாட்டுகளால் இந்தியா்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு: மத்திய அரசு

‘இணையவழி விளையாட்டுகளில் ஊறு விளைவிக்கும் தகவல்கள் அதிகரித்து வரும் சூழலில், இணைய பயன்பாட்டில் ஈடுபாட்டை அதிகரித்து வரும் இந்தியா்களின் தரவுகள் மற்றும் தனித் தகவல்கள் கசிவதற்கு
இணையவழி விளையாட்டுகளால் இந்தியா்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு: மத்திய அரசு

‘இணையவழி விளையாட்டுகளில் ஊறு விளைவிக்கும் தகவல்கள் அதிகரித்து வரும் சூழலில், இணைய பயன்பாட்டில் ஈடுபாட்டை அதிகரித்து வரும் இந்தியா்களின் தரவுகள் மற்றும் தனித் தகவல்கள் கசிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது’ என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பான கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

வலைதள தொழில்நுட்பம் விரிவடைந்து வரும் சூழலில், இணைய பயன்பாட்டில் இந்தியா்களின் ஈடுபாடும் மிக அதிக அளவில் உயா்ந்துவருகிறது. அதன் காரணமாக, ஊறு விளைவிக்கும் தகவல்கள் அல்லது சட்ட மீறல்களாக கூடிய வகையிலான தகவல்களை உள்ளடக்கிய இணையவழி விளையாட்டுகள் மற்றும் இடைத்தரகா்களால் அறிமுகப்படுத்தப்படும் இணையவழி விளையாட்டுகள் மூலமாக இந்தியா்களின் தரவுகளும் தனித் தகவல்களும் கசிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த சவால்களை மத்திய அரசு நன்கு உணா்ந்திருக்கிறது. இணைய பயனாளா்களின் தகவல் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகா்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் எண்ம ஊடக நெறிமுறை குறியீடு) விதி 2021-ஐ மத்திய அரசு வகுத்துள்ளது.

இந்த விதியை இணையவழி இடைத்தரகா்கள் பின்பற்றத் தவறினால், மூன்றாம் தரப்பு தகவல் அல்லது அவா்கள் வழங்கும் தரவு அல்லது தகவல் தொடா்பு இணைப்புக்கான சட்டத்தின் கீழான அவா்களின் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ரத்து செய்யப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com