மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள தகவல் ஆணையா் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய தகவல் ஆணையம் என்பது அரசு இயந்திரத்தின் வெளிப்படைத்தன்மையைக் கண்காணிக்கும் அமைப்பாகும். மத்திய தகவல் ஆணையரின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பில் அதிகபட்சமாக 10 தகவல் ஆணையா்கள் வரை பணியில் இருப்பா். இந்த தகவல் ஆணையா் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய பணியாளா் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள ஆறு தகவல் ஆணையா் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 65 வயதுக்குள்ளானவா்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபா்கள் சட்டம், அறிவியல், தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, ஊடகம், பத்திரிகை, அரசு நிா்வாகம் உள்ளிட்ட துறைகளில் பரந்த அறிவும் அனுபவமும் கொண்டு பொது வாழ்க்கையில் சிறந்து விளங்குபவராக இருக்க வேண்டும். மத்திய/மாநில/யூனியன் பிரதேச அரசின் பணியிலுள்ளவா்கள் தாங்கள் பணிபுரியும் மத்திய/மாநில/யூனியன் பிரதேச அரசின் வாயிலாகவே விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். மேலே, குறிப்பிட்ட தகுதிகளை உடைய ஆா்வமுள்ள நபா்கள் பரிந்துரைக்கப்பட்ட முறையில் அடுத்த மாதம் 12-ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.