ஒற்றுமை நடைப்பயணத்தில் இணைந்த பார்வையற்ற மாணவர்கள் குழு!

ஒற்றுமை நடைப்பயணத்தில் இணைந்த பார்வையற்ற மாணவர்கள் குழு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்தில் பார்வையற்ற மாணவர்கள் குழு இணைந்துள்ளனர். 

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணத்தில் பார்வையற்ற மாணவர்கள் குழு இணைந்துள்ளனர். 

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் ஹரியாணாவில் இருந்து தில்லிக்குள் இன்று நுழைந்துள்ளது. இதில் சோனியா, பிரியங்கா, நடிகர் கமல் ஆகியோர் இணைந்துள்ளனர். 

மேலும், பதர்பூர் எல்லையிலிருந்து ஆசிரமம் வரை நடைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் காந்தியுடன் இணைந்தனர். தில்லியில் பல இடங்களில் ராகுலின் வருகையையொட்டி மூவர்ணக் கொடிகள், பலூன்கள் மற்றும் தலைவரின் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டன.

இந்நிலையில், நடைப்பயணத்தில் பார்வையற்றோர் குழு ஒன்றும் இணைந்துள்ளது. நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புவதற்காக இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றதாகப் பார்வையற்ற மாணவர்கள் கூறினர். 

ஒற்றுமை நடைப்பயணம் ஏற்கனவே 12 மாநிலங்களில் ஏறக்குறைய 3,000 கி.மீட்டார்களைக் கடந்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பயணம் நிறைவடைய உள்ளது குறிப்பிடப்படத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com