தில்லியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: காரணம் இதுதான்!

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தலைநகர் தில்லியில் இன்று நுழைந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
தில்லியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: காரணம் இதுதான்!

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தலைநகர் தில்லியில் இன்று நுழைந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஹரியாணாவில் இருந்து தில்லிக்குள் நுழைந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா, நடிகர் கமல் ஆகியோர் இணைந்துள்ளனர். 

இந்நிலையில், தென்கிழக்கு தில்லியில் ஒற்றுமை நடைப்பயணம் அணிவகுத்துச் சென்றதால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடைப்பயணத்தால் பாதிக்கப்படக்கூடிய வழித்தடங்கள் குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போலிஸார் அவ்வப்போது அறிவுரை வழங்கி வருகின்றனர். 

தேசிய தலைநகர் ஆசிரமம் சௌக்கில் காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டு பயணம், மதியம் 1 மணிக்கு மீண்டும் தொடங்கியது. நடைப்பயணத்தின் அணிவகுப்பு மதுரா சாலை, இந்தியா கேட் மற்றும் ஐடிஓ வழியாக செங்கோட்டையை நோக்கிச் செல்கிறது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காண ஏராளமான மக்கள் ஆவலுடன் சாலைகளில் குவிந்தனர். நடைபாதைகள் முழுவதுமாக ஆக்கிரமித்தனர். இன்று காலை முதல் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 

இந்த நடைப்பயணம் காலை 10.30 மணியளவில் ஆசிரமம் சௌக் அருகே தொடங்கிய நிலையில், ஜெய் தேவ் ஆசிரமத்தை அடைந்து மாலை 4.30 மணியளவில் செங்கோட்டையில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com