
பிகாரின் புத்த கயாவில் 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள ஐந்து பேரில் மூவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் மியான்மாரைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலச் சக்கர பூஜைக்கு வந்த 32 வெளிநாட்டவர்களுக்கு இருமல் மற்றும் சளி இருப்பது தெரியவந்ததையடுத்து, மாவட்ட நீதிபதி தியாகராஜன் எஸ்.எம். தலைமையில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது என்று கயா சிவில் சர்ஜன் கமல் கிஷோர் ராய் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் புத்தகயாவில் உள்ள உணவகங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் புத்த கயாவில் காலச் சக்ர பூஜை நடத்தப்படுகிறது இதில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் பங்கேற்பார்கள்.இந்தாண்டுக்கான காலச் சக்ர பூஜை டிசம்பர் 29-ம் தேதி முதல் மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
இந்த சிறப்புப் பூஜையில் பங்கேற்க திபெத்திய புத்த மதகுரு தலாய்லாமா புத்தகயா நகருக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.