அடுத்த 40 நாள்களில்.. இந்தியாவில் கரோனா அதிகரிக்குமாம்: அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் அடுத்த 40 நாள்களுக்கு அதாவது முக்கியமாக ஜனவரி மாதத்தில் கரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அடுத்த 40 நாள்களில்.. இந்தியாவில் கரோனா அதிகரிக்குமாம்: அதிர்ச்சித் தகவல்!
அடுத்த 40 நாள்களில்.. இந்தியாவில் கரோனா அதிகரிக்குமாம்: அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் அடுத்த 40 நாள்களுக்கு அதாவது முக்கியமாக ஜனவரி மாதத்தில் கரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக கிழக்கு ஆசியாவை கரோனா தாக்கிய 30-35 நாள்களுக்குப் பிறகு கரோனாவின் புதிய அலை இந்தியாவைத் தாக்கத் தொடங்கியது. எனவே மக்கள் இந்த நாற்பது நாள்களும்  மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் கூறுகையில், 

இந்தியாவில் நோய்த் தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பதாகவும், உயிரிழப்பு, மருத்துவமனை அனுமதி பெறுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாகவும், நிலைமை தீவிரமடைவில்லை என்றும் கூறியுள்ளது. 

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், பேங்காக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும்  2 சதவீத சர்வதேசப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்த அரசு கட்டாயமாக்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களில் வந்த 6,000 சர்வதேசப் பயணிகளிடம் பரிசோதனை செய்ததில் 39 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

மேலும், வெளி நாடுகளில் இருந்து வரும் சர்வதேசப் பயணிகளுக்கு ஏர் சுவிதா படிவங்களை நிரப்புவதும், 72 மணி நேரத்துக்கு முன்னதாக எடுத்த ஆர்டி-பிசிஆர் சோதனையும் அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எந்தவொரு நிகழ்விற்கும் தயாராகுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சுகாதார அமைச்சர் மாண்டவியா கரோனா நிலைமையைச் சமாளிக்க நாட்டின் தாயார் நிலையை மதிப்பீடு செய்யக் கூட்டம் நடத்தி ஆலோசித்துள்ளனர். 

கரோனா நோய்த் தொற்றின் எந்தவொரு வேகத்தையும் சமாளிக்கவும், தயார்நிலையைச் சரிபார்க்கவும் இந்தியா முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில்  செவ்வாய்க்கிழமை ஒத்திகை நடத்தப்பட்டன. 

பல நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடு எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

சமீபத்திய அதிகரிப்பு கரோனாவின் ஒருவகையான ஒமைக்ரானின் துணை மாறுபாடு ஆகும். பிஎப்-7 வகை கரோனாவின் தாக்கம் கொண்ட ஒரு நபரின் மூலம் 16 பேரை பாதிப்படையச் செய்யும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com