சபரிமலைக்கு இதுவரை ரூ.223 கோடி வருவாய்!

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 39 நாள்களில் ரூ.223 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம் போா்டு தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்


சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 39 நாள்களில் ரூ.223 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம் போா்டு தெரிவித்துள்ளது. 

சபரிமலையில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் முதல் தை மாதப் பிறப்பு வரை மண்டல - மகர விளக்கு காலங்களில் ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து இரண்டு மாதங்களுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவார்கள். 

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. 

இந்நிலையில், இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.  தற்போது கரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது, 

இதுவரை 29 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் சிறுவர், சிறுமியர். இரண்டு ஆண்டுகளாக சபரிமலை வரமுடியாமல் இருந்த, 10 வயதை எட்டும் நிலையில் உள்ள சிறுமியர்கள் அதிகயளவில் வந்தனர். 

பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருவதால், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், வருவாய் வசூலும் அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து  தேவஸம் போா்டு தலைவர் அனந்த கோபன் கூறியதாவது: மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 39 நாள்களில் ஞாயிற்றுக்கிழமை மலை வரை மலையேறி கோயிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 29 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் மூலம் ரூ.222,98,70,250 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது 2017 இல் பதிவு செய்யப்பட்ட வருவாயை ரூ.164 கோடியை தாண்டியது. பிரசாதங்கள் மூலம் ரூ.70.10 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. 

இதில், காணிக்கையாக ரூ.90 கோடி கிடைத்துள்ளது. இந்த காலத்தில் கிடைக்கும் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு விழாவை நடத்துவதற்கு செலவிடப்படுகிறது என தெரிவித்தார்.

39 நாள்களில் ஆண்டுகள் வாரியான வருவாய் விவரம்:
2022 - ரூ.222.98 கோடி
2021 - ரூ.78.92 கோடி
2020 - ரூ.9.09 கோடி
2019 - ரூ.156 கோடி
2018 - ரூ.105 கோடி
2017 - ரூ.164 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com