லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஜன. 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயம்! எந்தெந்த நாடுகளுக்கு??

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு வருகிற ஜனவரி 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயம் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

News image
மன்சுக் மாண்டவியா
Updated On :29 டிசம்பர் 2022, 10:04 am

DIN

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு வருகிற ஜனவரி 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொற்று பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில், தொற்று பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு வருகிற கரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோர் பயணத்திற்கு முன்னதாகவே கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவை மத்திய அரசின் 'ஏர் சுவிதா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.