வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 16% உயர்வு!

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான   காலகட்டத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான   காலகட்டத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஆணையத்தின் மூலம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 17.43 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் காலகட்டத்தில் 15.07 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.  

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி இலக்கு இந்த நிதியாண்டில் 23.56 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் இலக்கில் 74 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எம். அங்கமுத்து கூறுகையில், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்தும் நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் இணைந்து செயலாற்றி வருகிறோம். இதன் மூலம் தரமான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com