ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின் 439 தீவிரவாதிகள் கொலை

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு பிறகு 439 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு பிறகு 439 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகின்றன.

மாநிலங்களவை உறுப்பினர் நீரஜ் டாங்கியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள நித்யானந்த ராய் கூறியிருப்பதாவது:

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5, 2019 முதல் ஜனவரி 26, 2022 வரையிலான காலகட்டத்தில் 541 தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில், 439 தீவிரவாதிகள், 109 பாதுகாப்புப்படை வீரர்கள், 98 மக்கள் பலியாகியுள்ளனர்.

மேலும், ரூ. 5.3 கோடி அளவிலான தனியாருக்கு சொந்தமான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com