2016-2020 இல் 20,17,427 கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 2016-2020 ஆம் ஆண்டில் மொத்தம் 20,17,427 கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

புது தில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 2016-2020 ஆம் ஆண்டில் மொத்தம் 20,17,427 கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் சுக்ராம் சிங் யாதவ் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் புதன்கிழமை பதிலளிக்கையில், "தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி), கள்ள நோட்டுகள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்த தரவுகளைத் தொகுக்கும் நோடல் ஏஜென்சி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து அறிக்கைகளை பெற்று, அதன் ஆண்டு வெளியீடான 'கிரைம் இன் இந்தியா'வில் வெளியிடுகிறது."

அதன்படி, " கடந்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2016 முதல் 2020 வரை, நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 20,17,427 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் இரண்டும் இதில் அடங்கும்.

2022 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11 வரையிலும், இரண்டாம் பகுதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையிலும் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com