
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்திற்கு இன்று சைக்கிளில் சென்றார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கூட்டத்தொடரையொட்டி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தனர். அப்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று, தான் தங்கியிருக்கும் இருப்பிடத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போதும் அவர் பிற அமைச்சர்களுடன் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.