தேர்தல் என்றால் தாடியை வளர்த்து ரவீந்திரநாத் தாகூர் போல் தோன்றும் மோடி: தெலங்கானா முதல்வர்

பிரதமர் மோடி அணியும் உடைகளை நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார்.
மோடி (கோப்புப்படம்)
மோடி (கோப்புப்படம்)

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், நடுத்தர, ஏழை மக்களுக்கு விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி அணியும் உடைகளை நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார். தேர்கலுக்காக அவர் அணியும் உடைகளும் நிதிநிலை அறிக்கையும் கவர்ச்சியாக இருந்தாலும் அதில் சாரம் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார். 

அடுத்த மூன்றே நாள்களில், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் மோடியும் சந்திரசேகர ராவும் கலந்து கொள்கின்றனர். இருப்பினும், தனது விமரிசனங்களை நேரில் கூற பின்வாங்க மாட்டேன் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில், சந்திரசேகர ராவ் பாஜகவின் 'பி' என்றே விமர்சிக்கப்பட்டுவந்துள்ளார். அதற்கு ஏற்றார்போல், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய பல சட்டங்களுக்கு அவரின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

இதற்கு மத்தியில் பேசிய சந்திரசேகர் ராவ், "சமூக ஊடக நிர்வாகத்தின் மூலம், அப்பட்டமாக பொய்களை கூறி, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, இதுவரை மக்களை முட்டாளாக்க முடிந்தது. ஆனால் தற்போது அவை அம்பலமாகியுள்ளன. அவர்கள் வெறுப்பு மற்றும் பிரிவினையின் வகுப்புவாத அரசியலை விளையாடுகிறார்கள். 

தேர்தல் நேரம் என்றால் தாடியை வளர்த்து ரவீந்திரநாத் தாகூர் போல் தோன்ற வேண்டும். தமிழகம் என்றால் லுங்கி அணிய வேண்டும். என்னதான் நடக்கிறது? இந்த மாதிரியான வித்தைகளால் நாட்டுக்கு என்ன கிடைக்கும்? பஞ்சாப் தேர்தல் என்றால் தலைப்பாகை அணிவார். மணிப்பூரில் மணிப்பூரி தொப்பி உத்தரகாண்டில் இன்னொரு தொப்பி அணிவார். இப்படி எத்தனை தொப்பிகள்?" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com