மலேசியா, டோங்கோவில் பலியானோருக்கு மாநிலங்களவையில் இரங்கல்

மலேசியா, டோங்கோவில் பலியானோருக்கு மாநிலங்களவையில் இரங்கல்

மலேசியாவில் மழையிலும், டோங்கோ தீவின் எரிமலை வெடிப்பிலும் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Published on

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 

முன்னதாக மலேசிய மழையிலும், டோங்கோ தீவின் எரிமலை வெடிப்பிலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. மேலும் பிப்ரவரி 11ஆம் தேதி வரை முதல் கூட்டத்தொடர் நடைபெறும். இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 முதல் ஏப்ரல் 8அம தேதி வரை நடைபெறும். 

ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவை, மக்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com