ஏற்றத்தில் பங்குச் சந்தை: 60,000 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்

இந்த வார வர்த்தகத்தில் தொடர்ந்து இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
ஏற்றத்தில் பங்குச் சந்தை: 60,000 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்

இந்த வார வர்த்தகத்தில் தொடர்ந்து இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று(பிப்.1) 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

பட்ஜெட் அறிக்கைகளும் பங்குச் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் நேற்றைய வர்த்தகத்தைத் தொடர்ந்து இன்றும்  பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (பிப்.1) 58,862.57 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 59,293.44 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  695.76 புள்ளிகள் 59,558.33 உயர்ந்து  புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,576.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,706.20 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 203.15 புள்ளிகள் அதிகரித்து 17,780.00  புள்ளிகளில் நிறைவடைந்தது.

இதனால், கடந்த 2 வாரமாக வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்குச் சந்தை கடந்த சில நாள்களாக எழுச்சியடைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com