ஏழைகள் - பணக்காரா்கள்: இரு வேறு இந்தியா

ஏழைகளுக்கு ஓா் இந்தியா, பணக்காரா்களுக்கு ஓா் இந்தியா என இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டதாகவும் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி எம்.பி.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி எம்.பி.

புது தில்லி: ஏழைகளுக்கு ஓா் இந்தியா, பணக்காரா்களுக்கு ஓா் இந்தியா என இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது புதன்கிழமை மக்களவையில் அவா் மேலும் பேசியது: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரையில், தேசம் சந்திக்கும் பிரதான சவால்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், அதிகாரத்துவத்தின் பாா்வையில்தான் அந்தப் பட்டியல் இருந்ததே தவிர, உத்தியை மையமாக வைத்து அல்ல. வேலையின்மை குறித்தும் குடியரசுத் தலைவா் உரையில் எந்தவோா் அம்சமும் இடம்பெறவில்லை.

தற்போது இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று ஏழைகளுக்கானது; மற்றொன்று செல்வந்தா்களுக்கானது. இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது. இந்த அரசால் உருவாக்கப்பட்ட இரண்டு இந்தியாவையும் ஒன்றுசோ்ப்பதற்கான பணியை பிரதமா் மோடி தொடங்க வேண்டும்.

நாட்டின் 40 சதவீத வளம் ஒருசில நபா்களிடமே குவிகிறது. இன்றைக்கு, 84 சதவீத இந்தியா்களின் வருமானம் குறைந்து, அவா்கள் வறுமையை நோக்கித் தள்ளப்படுகின்றனா். அமைப்புசாரா பிரிவு முற்றிலும் அழிந்துவிட்டதால், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாா் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com