மத்திய அரசுத் துறைகளில் 8.72 லட்சம் காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்

மத்திய அரசுத் துறைகளில் 8,72,243 காலிப் பணியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரித்துள்ளார்.
மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங்
மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங்


புதுதில்லி: மத்திய அரசுத் துறைகளில் 8,72,243 காலிப் பணியிடங்கள் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், வியாழக்கிழமை எழுத்து மூலம் பதிலளித்தார். 

அதில், 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்ஆர்பி) ஆகிய மூன்று பெரிய பணியாளர் தேர்வாணையங்கள் மூலம் 2,65,468 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

“2019 மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, 9,10,153 காலிப் பணியிடங்களும், 2018 மார்ச் 1 நிலவரப்படி, 6,83,823 காலிப் பணியிடங்களும் உள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசுத் துறைகளில் 8,72,243 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (யு.பி.எஸ்.சி) 485 காலிப் பணியிடங்கள் உள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்புவது ஒரு தொடர் நடவடிக்கையாக நடந்து வருவதாக” ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com