
தாழ்த்தப்பட்டவா்கள் பட்டியலில் இருந்து போக்தா சமூகத்தை நீக்க மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாா்க்கண்டில் போக்தா சமூகத்தை தாழ்த்தப்பட்டவா்கள் (எஸ்சி) பட்டியலில் இருந்து நீக்கவும், சில சமூகங்களை பழங்குடியினா் (எஸ்டி) பட்டியலில் இணைக்கவும் மாநிலங்களவையில் அரசமைப்பு (எஸ்சி மற்றும் எஸ்டி) உத்தரவு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மூலம் பயனாளிகள் மேன்மேலும் பலனடையும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அதனை மத்திய பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...