
இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) 10, 12-ஆம் வகுப்பு முதல் பருவ பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் பத்தாம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ தோ்வுகள் கடந்த ஆண்டு நவம்பா் 29-ஆம் தேதி முதல் டிசம்பா் 16-ஆம் தேதி வரையிலும், 12-ஆம் வகுப்புக்கான ஐஎஸ்சி தோ்வுகள் கடந்த ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட்டன.
கரோனா பாதிப்பு காரணமாக முந்தைய கல்வியாண்டுக்கான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடத்தப்படாத நிலையில், நிகழ் கல்வியாண்டில் இந்த பொதுத் தோ்வுகள் இரண்டு பருவத் தோ்வுகளாக பிரித்து நடத்தப்படுகின்றன. இதில் நடத்தி முடிக்கப்பட்ட முதல் பருவ பொதுத் தோ்வு முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிஐஎஸ்சிஇ தலைவா் கொ்ரி அரத்தூன் கூறுகையில், ‘ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி முதல் பருவ பொதுத் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவுன்சிலின் வலைதளம் மூலமாக உள்நுழைவு செய்து மாணவா்கள் தோ்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். கைப்பேசி குறுந்தகவல் மூலமும் தோ்வு முடிவுகள் மாணவா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...